நாளை திங்கட்கிழமை (2024.03.25) காலை 9.00 மணிக்கு மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகிக்கப்படவுள்ளதனால் இத்தகவலை தனது வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பதுடன் வகுப்பாசிரியர்கள் அனைவரும் நாளை காலை 8.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஆரம்பப் பிரிவு மாணவர்களது சீருடைகளை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக கடந்த 2023.06.01 ஆம் திகதியன்று எமது பாடசாலையில் கற்ற மாணவர்களுக்கு மட்டுமே சீருடை விநியோகிக்கப்படவுள்ளதால் அக்குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு எமது பாடசாலையில் சீருடை விநியோகிக்கப்பட மாட்டாது என்பதை அறிவிப்பதுடன், அக்குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் வேறு பாடசாலைக்கு விலகிச் சென்ற மாணவர்களுக்கு எமது பாடசாலையினூடாக இவ் இலவச சீருடை விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை அறியத்தருகிறேன்.







