குரிவெல ஹமீதியா கல்லூரி

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

அதிபர் செய்தி

திரு எம்.பி.எம். அஸ்லம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...

ஹமீதியா கல்லூரியின் இணையதளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

மாத்தளை, மாவட்டத்தில் மிகவும் புகழுக்குரிய ஒரு பாடசாலையாக மிளிர்ந்து கொண்டிருக்கும் இந்த பாடசாலையில்  அதிபராக செயலாற்ற கிடைத்ததை  நான் உண்மையிலேயே பெரும்பாக் கியமாக உணர்கிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்.

எமது ஹமீதியாவில் உள்ள ஆசிரியர்கள் உயர் பண்பு மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களாக உள்ளனர், கல்வித்திட்டங்களை மட்டுமன்றி மாணவர்களின் சுய வளர்ச்சிக்கு தேவையான வாழ்க்கை திறன்களையும் மிகவும் வளமான முறையில் கற்பிப்பதோடு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகளை இனங்கண்டு கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிவர்த்தி செய்யும் வித்தியாசமான ஆதரவை மாணவர்களுக்கு வழங்கி பணிபுரிகின்றனர். எங்கள் மாணவர்களின் நடத்தை ஒழுக்கம், தார்மீக ஒருமைப்பாடு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். 

செழுமைப்படுத்துதல், மாணவர் மைய க் கல்வி, சமச்சீர் மற்றும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாணவர் நலனில் கவனம் செலுத்தும் ஒரு சிறந்த ஆசிரியர் குழாம், நேர்மறை சிந்தனை உள்ள பெற்றோர்கள் ,நலம் விரும்பிகள்,மற்றும் ஊழியர்கள் என இன்னோரன்ன  காரணங்களால் எங்கள் கல்லூரியில்  அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

எங்கள் மாணவர்கள் அனைவரும் தங்கள் முழு திறனையும் அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்ஷா அல்லா  அதை சாத்தியமாக்குவதே எங்கள் பணியாகவும்  அதற்கான தளத்தை வழங்குவதே எங்கள் நோக்கமாகவும் கொண்டிருக்கிறோம்.

நமது கல்லூரியை  சிறந்த கல்லூரியாக  மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம். எங்களின் வளமான  கற்றலின் ஒரு பகுதியாக இருக்க உங்களை வரவேற்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

நல்ல எண்ணங்களும் நல்லொழுக்கமும் எமது வாழ்க்கையை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் எனவே உன்னத எண்ணங்களை உங்கள் பக்கத்திலிருந்தும் எதிர்பார்க்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்

திரு எம்.பி.எம். அஸ்லம்
அதிபர்
மா/குரிவெல ஹமீதியா கல்லூரி.