குரிவெல ஹமீதியா கல்லூரி

நிறுவனர்கள்

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

குரிவெல பிரதேச முஸ்லிம்களுக்கு என தனிப்பாடசாலை ஒன்று காணப்படாதவிடத்து இப்பிரதேசத்தில் இயங்கி வந்த சிங்கள வித்யாலயத்தின் அருகிலான ஒரு சிறிய நிலப்பரப்பில் தற்காலிக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு கல்வி அமைச்சின் அனுமதியுடன் 1947.01.06 அன்று ஆரம்பமான இப்பாடசாலை அப்போது அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கென வழங்கப்பட்ட அக்கட்டிடம் போதிய வசதியை கொண்டிராமையாலும், முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்பட்ட கல்வி,கலாசார விழிப்புணர்ச்சியின் காரணமாகவும் முஸ்லிம் மாணவர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணவேண்டிய அவசியத்தை சமூகத்தின் புத்திஜீவிகள் உணர்ந்தமைய்யாலும்  இப்பாடசாலைக்கென தனியானதொரு கானியைப்பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இச்சந்தர்ப்பத்திலேயே 1962இல் இப்பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில்  கௌரவ பிரதிநிதியாக கலந்து கொண்ட ரத்தோட்டை தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் “சந்ரசேன முனவீர” ஊடாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தின் அவர்களிடமும் இப்பிரச்சினை முன்மொழியப்பட்டது.

                  அவர் இப்பிரதேச முஸ்லிம் பாடசாலைக்கு என நிலப்பரப்பொன்றை பெற்றுத்தருவதாக வாக்களித்த வேளை, அம்மேடையில் ஒரு பிரமுகராகவும், அன்று பென்விலா தோட்டமென்றும் இன்று குரிவெல என்றும் அழைக்கப்படும்.  இப்பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்த அல்ஹாஜ் எ.எச்.எம்.அப்துல் ஹமீட் அவர்கள்  தனது 3 ½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்குவதாக கூறி உடனடியாக அதனை நிறைவேற்றியும் வைத்தார்கள். இதனால் அதுவரை முஸ்லிம் மாணவர்கள் கற்று வந்த சிங்கள வித்யாலயத்திலிருந்த பிரத்தியேகக் கட்டிடம் அவர்களிடமே கையளிக்கப்பட 1965இல் அல்ஹாஜ் எ.எச்.எம். அப்துல் ஹமீட் அவர்களால் வழங்கப்பட்ட காணியில் குரிவெல முஸ்லிம் வித்யாலயம் ஆரம்பமானது. இப்பாடசாலை நிலப்பரப்பு மஹிந்தராஜபக்ச வித்தியாலயத்தை ஒரு புற எல்லையாகவும் மகாவலிகங்கையின் கிளை நதியான சுது கங்கையை மறுபுற எல்லையாகவும் கொண்டு, சிங்கள வித்யாலயத்திலிருந்து நிந்தர  வேலியால் பிரிக்கப்பட்டதாக 3 ½ ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இதுவே இன்றைய மா/ குரிவெல ஹமீதியா கல்லூரி தோற்றம் பெற்ற வரலாறு ஆகும்.