குரிவெல ஹமீதியா கல்லூரி

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

பிரதி அதிபர் செய்தி

திருமதி. என்.எப். ரொஸ்மினா

நமக்கும் நாட்டுக்கும் பலன் தரக்கூடிய புத்திஜீவிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் கலைத்திட்டத்தை ஒவ்வொரு பாடசாலையும் சிரமம் பாராது போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் எமது பாடசாலை குறி வெல ஹமீதியா கல்லூரி என்பது சாதனைகளால் கட்டப்பட்டடஒரு பிரமாண்டம் என்றே சொல்லலாம். அனுள் நானும் ஒரு மாணவியாய் வாழ்ந்து இன்று பிரதி அதிபரா அடியெடுத்து வைத்திருப்பது அதன் சாதனைகளுள் ஒன்று என்பதற்கு சிறந்த உதாரணமாகும். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

அதன் அடிப்படையில் ஹமீதியா என்ற வித்து முட்டி மோதி பூமியை துளைத்து கம்பீரமாய் வீற்றிருக்கும் இத் தருணத்தில் மேலும் ஒரு சிறு முயற்சியாய் என் கல்லூரிக்கான இணைய தளத்தை வடிவமைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடுவதைய இட்டு அகமகிழ்கிறேன்.

மாற்றங்கள் அத்தனையும் சாதாரணமாய் அரங்கேறி விடுவதில்லை. பலரின் முயற்சிகளும் தியாகங்களும் அதனுள் மறைந்திருக்கும். அவ்வகையில் இதற்காக அரும்பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மீடியா குழுவிற்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. என்.எப். ரொஸ்மினா
பிரதி அதிபர்
மா/குரிவெல ஹமீதியா கல்லூரி .