|
1947 - 1950 |
திரு. எ.எம். ஷாஹுல் ஹமீத் |
|
எமது கல்லூரியின் முதலாவது அதிபர். 3 வருடங்களும் 3 மதங்களும் எமது பாடசாலைக்காக சேவையாற்றினார். இரண்டு ஆசிரியர்களையும் 42 மாணவர்களையும் கொண்டு ஆரம்பமான இப்ப பாடசாலையில் இருவருடங்களில் மாணவர் தொகை 175 ஆக உயர்வடைய இப்பாடசாலை கணிஷ்ட , இடைநிலை வகுப்புகள் கொண்டதாக வளர்ச்சி அடைந்தது. |
|
1950 - 1953 |
திரு. எஸ்.எல். அப்துல் ஹசன் |
|
எமது கல்லூரியின் இரண்டாவது அதிபர். மூன்று வருடங்கள் சேவையாற்றினார். |
|
1953 - 1956 |
திரு. எம். சுப்பையா |
|
எமது கல்லூரியின் மூன்றாவது அதிபர். மூன்று வருடங்களும் நான்கு மதங்களும் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1956 - 1958 |
திரு. எம். ஜமால்தீன் |
|
எமது கல்லூரியின் நான்காவது அதிபர். மூன்று வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1958 - 1963 |
திரு. எச். எம். பஷீர் |
|
எமது கல்லூரியின் ஐந்தாவது அதிபர். ஐந்து வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். அவர்களது காலத்திலேயே 1959 இல் கா.பொ.த (சா.த) வகுப்பு வரை தரமுயர்த்தப்பட்டது. |
|
1963 - 1964 |
திரு. எச். எல். அப்பாஸ் |
|
ஒரு வருடம் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார் |
|
1964 - 1970 |
திரு. யு. அப்துல் ஹசன் |
|
ஆறு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். இவ்வதிபரின் காலத்திலேயே முதன் முறையாக புலமைப்பரிசில் பரீட்சையிலும், கா.பொ.த (சா.த) பரீட்சையிலும் மாணவர்கள் சித்திஅடையத் தொடங்கினார்கள் |
|
1970 - 1974 |
திரு. என்.எம்.எம். சாஹிர் |
|
நான்கு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். ஆசிரியர் விடுதியும், இன்னும் பாடசாலைக்கான கட்டட வசதிகளும் மேம்பாடடைந்தன. |
|
1998 - 2003 |
திரு. கே.எம்.எஸ்.எம். சல்சபீல் |
|
ஐந்து வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1976 - 1982 |
திரு. ஐ.எல்.முஸ்தபா |
|
ஆறு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். அவர்களது காலத்தில் இப்பாடசாலையில் கட்டட வசதிகள் அதிகரிக்க தொடங்கின. |
|
1982 |
திரு. கே.எம்.எஸ்.எம். சல்சபீல் |
|
ஒரு மாதம் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1982 - 1985 |
திரு. எஸ்.எல்.எ. ஹசன் |
|
மூன்று வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். அவர்களது காலத்திலேயே பாடசாலைக்கு மின்சார வசதி பெறப்பட்டது |
|
1985 - 1987 |
திரு. எ.எல்.எ. ஜெலீல் |
|
ஐந்து வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1987 |
திரு. யு.எல்.எம். கலீல் |
|
ஒருமாதகால தற்காலிக அதிபராக எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
1987 - 1990 |
திரு. எம்.எச்.எல்.எம் தாஹிர் |
|
மூன்று வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் தற்போதைய நூல்நிலையக் கட்டிட வசதி பெற்றுக்கொள்ளப்பட்டதோடு அக்காலத்தின் மிகப்பெரிய குறைபாடாகவிருந்த தளபாட வசதிகளும் தேவைக்கதிகமாகவே பூர்த்தி செய்யப்பட்டது. |
|
1990 - 1991 |
திரு. ஐ.எம். பாரிஸ் |
|
ஒரு வருடத்திற்கும் குறைந்த காலம் தற்காலிக அதிபராக எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். உலக வங்கியின் உதவி நிதியத்தினுடாக தற்போது விஞ்ஞான ஆய்வு கூடமாகவும் அப்போதைய பல நோக்கு கட்டிட அறையாகவும் விளங்கிய பகுதிக்கான நிதியும் தற்போதைய பிரதான கட்டிடத்திற்கான நிதியும் ஒதுக்கப்பட்டமை |
|
1990 - 2000 |
திரு. எஸ்.எம்.எம். தாஹிர் |
|
ஒரு வருடம் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். 2ம் தரத்தில் இருந்து இப்பாடசாலை தரம் 1C பாடசாலை ஆகவும் 1992 முஸ்லிம் மகாவித்தியாலயமாகவும் முன்னேற்றமடைந்தது. இன்னும் 1993 ஹமீதியா கல்லூரி எனவும் பெயர் மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவை மட்டுமன்றி கா.பொ.த (சா.த) தரம் ,கலை, வர்த்தகம் மனையியல் ஆகிய பிரிவுகளும் ஆரம்பிக்கப்படமை இவ்வதிபர் கால இமாலய சாதனைகள் ஆகும். |
|
2000 |
திரு. ஐ.எம். பாரிஸ் |
|
ஒரு மாதம் தற்காலிக அதிபராக எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
2000 - 2002 |
திரு. எம். ஹனிபா |
|
இரண்டு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். எஸ்.எம்.எம் தாஹிர் அதிபர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இரு மாடி கட்டிடத்தின் கீழ்மாடி பணிகள் பூர்த்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அக்கட்டிடம் 90x25 அளவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை 110x25 ஆக விசாலமாகி பூர்த்தி செய்தமை இவரது பெருமுயற்சியின் பலனாகும். |
|
2002 - 2008 |
திரு. எ.எம். நூர் மொஹமத் |
|
ஆறு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். இவரது காலத்திலும் இக்கல்லூரி மிகச் சிறந்த இலக்குகளை நோக்கி செல்லப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சமாகும். இப்பாடசாலையின் விளையாட்டு மைதான அபிவிருத்தி மைதானத்திற்கு தடையாக இருந்த பாரியமரம் ஒன்று வெற்றி அகற்றி மைதானத்தை சீர்செய்தமை, இரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியை பூரணப்படுத்தி, அதனை ஒரு வரவேற்பு மண்டபமாகவும் மாற்றியமைத்தமை இவரது சாதனைகலேயாகும். மலசலகூட புனர்நிர்மாணம் கட்டட வசதிகள் என புறவிருத்திகளில் மட்டுமின்றி நூல் நிலையத்திற்கு நூல்கள் பெற்றுக் கொடுத்தல், டெங்கு ஒழிப்பு திட்டம, பரீட்சை பெறுபேறுகளில் வளர்ச்சி, பல்கலைக்கழக நுழைவு வீத அதிகரிப்பு என இவரது காலம் ஒரு புரட்சிகரமான சேவைகள் நிறைந்ததாக அமைந்திருந்தது. |
|
2008 - 2010 |
திரு. ஐ.எம். பாரிஸ் |
|
அதிபர் சென்றதைத் தொடர்ந்து இப்பாடசாலையை தாங்கிப் பிடித்தவராக மீண்டும் அதிபராக பொறுப்பேற்று 2010 வரை செய்யப்பட்டார். இரண்டு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். |
|
2010 - 2013 |
திரு. எம்.எஸ்.எம். ராசிக் |
|
மூன்று வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். இவரது கால செயற்பாடுகள் இக்கல்லூரியின் அமைதி நிறைந்த ஆக்கபூர்வமான ஆரம்பத்திற்கு வித்திட்டதாக அமைந்திருந்தது. இவராலேயே ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தற்காலிக கூடாரத்திற்கு கூரைமாற்றுதல், நிதாகுல்ஹைர பவுண்டேஷன் உதவியுடன் தொழுகை அறையை நிர்மாணித்தமை, ரூம் டு ரீட் கட்டிடம், உயர்தர வகுப்பு மாணவர் தற்காலிக வகுப்பறை, மலசலகூட வசதிகள், பாடசாலையின் உள்ளக நடைபாதை, சிறுவர் மைதானத்திற்கு மதில் அமைக்கும் திட்டம், ஒலிபெருக்கி வசதி மேம்பாடு, அதிபர் காரியாலய அபிவிருத்தி ,ஆசிரியர் விடுதி புனர்நிர்மாணம் என பல்வேறு ஆக்க பணிகளில் அயராது ஈடுபட்ட அதிபராக எம் .எஸ். எம் ராசிக் அவர்கள் செயலாற்றி உள்ளார்கள். இவரால் பாடசாலையின் பௌதிகவளம் மேம்பாடு மாத்திரமின்றி கல்வி அபிவிருத்தி செயல்பாட்டிலும் ஆர்வமாக முன்னெடுக்கப்பட்டதன் மூலமும் இப்பாடசாலை பெறுப்பேற்று வரலாற்றிலும் பாரிய அடைவுக்கான சந்தர்ப்பம் கிட்டியது. இவ்வதிப்பரின் காலத்தில் ஹமீதியா மாணவர்கள் ,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரையும் திறம்பட தன் பக்கம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டியமை முக்கிய அம்சமாகும். |
|
2013 - 2014 |
திரு. கே.எம்.எம். பர்ஹான் |
|
பல அதிபர்களின் கீழ் நிதி முகாமைத்துவ உதவியாளராகவும் பிரதி அதிபராகவும் பணிபுரிந்த கே.எம்.எம் பர்ஹான் அவர்கள் பதில் அதிபராக 2013.01.23 அன்று பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இவரது காலத்திலேயே மா/ குரிவெல ஹமீதியா கல்லூரி அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற (2013) மீலாத் விழா போட்டியில் அதிக முதலிடங்களை பெற்று முழு இலங்கையிலும் முதலிடம் பெற்ற பாடசாலையாக தேர்வு செய்யப்பட்டமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும். அனைவரிடமும் மென்மையான போக்குடன் பழகும் இவ்வதிப்பர் 2014.02.10 வரையான குறுகிய காலப்பகுதியே பதவி வகித்திருந்தாலும் கல்வி,இணைப்பாடு விதமான செயல்பாடுகளில் அதிக கரிசனை எடுப்பவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. |
|
2014 - 2019 |
திரு. எஸ். முஹாஜிதீன் |
|
ஆறு வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். பாடசாலை அபிவிருத்தி சங்கக் குழுவினதும், பழைய மாணவர் சங்கத்தினதும், ஆசிரியர் குலாத்தினதும் பரிபூரணமான ஒத்துழைப்புடன் பாடசாலை உள்விவகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் ,பௌதீக தேவைகள் இனங்காணப்பட்டு கல்வி, பௌதீக அபிவிருத்திகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு சிறந்த நிலைக்கு பாடசாலை இட்டுச் செல்லப்பட்டதுடன் பாடசாலைக்கு உதவி செய்ய முன்வந்த கொடைவள்ளல் அவர்களின் 110x25 அளவிலான “உசைன் ஞாபகார்த்த கட்டிடம்” பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரதும், இவ்வதிபரின் அர்ப்பணிப்புடனான சேவையினாலயே என்பது முக்கிய அம்சமாகும் இன்னும் இவ்வதிபரின் முயற்சியால் விளையாட்டு மைதான பார்வையாளர் மண்டபம் , மலசல கூடத்தொகுதிகள் கட்டடப்பட்டுள்ளதோடு கா.பொ.த (சா.த) மாணவர்களுக்கான மேலதிக செயற்றிட்ட வகுப்புகள், புலமைபரிசிள் வகுப்புகள், வாசிப்பு கூடாரம் என்பவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றமை, எதிர்காலத்திலும் இப்பாடசாலை வெற்றிச் சிகரங்களை எட்டித் தொடும் என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. |
|
2019 - 2021 |
திரு. எ.சீ.எஸ். ஹமீத் |
|
மூன்று வருடங்கள் எமது கல்லூரிக்காக சேவையாற்றினார். பாடசாலை சுற்று சூழல் பூமரங்கள் நடப்பட்டு அழகு படுத்தப்பட்டது. மற்றும் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. |







