மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேசத்தில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.
தேசத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டையும் சமூக நீதியையும் ஏற்படுத்தி மாறி வரும் உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையிலும் சர்வதேச சமூகத்தில் கௌரவமான இடத்தை பெறும் வகையிலும் மேன்மையும் மனநிறைவும் தரும் கல்வி நிலையமாக திகழச் செய்தல்
பிள்ளைகளுக்கு கல்வியின் சம சந்தர்ப்பத்தை வழங்கி இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கல்வி மேம்பாட்டுக்கும் சமூக அபிவிருத்திக்கும் சமய கலாச்சார ஒழுக்க பண்பாட்டு விருத்திக்குமானசேவைகளை உரியமுறையில் தியாக சிந்தையுடன் அர்ப்பணிப்புடன் செயற்றினாக வழங்குவதே எமது பாடசாலையின் முதன்மையான பணியாகும்.